இந்தியன் 2 தான் நான் நடிக்கும் கடைசி படம் – நடிகர் கமல்ஹாசன் !

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிப்பில் துவங்கிய இந்தியன் 2 படம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை. படத்தில் அரசியல் சித்தாந்தத்தை சேர்ப்பதும், சேர்க்காததும் ஷங்கரின் விருப்பம். தற்போது என் கவனம் எல்லாம் மக்கள் பக்கம் உள்ளது. இந்தியன் 2 தான் நான் நடிக்கும் கடைசி படம். நான் ஏற்கனவே லேட்டாக அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் நான் விரைந்து செயல்பட வேண்டும். எனவே என்னால் சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த முடியாது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அந்த ஒன்று அரசியல் தான் என்றார் கமல்ஹாஸன். கமல் ஹாஸன் பேட்டி அளிக்கும்போது எல்லாம் இந்தியன் 2 தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று கூறுவதை கேட்டு அவரின் ரசிகர்கள் கவலை அடைகிறார்கள். இருப்பினும் அவரை அரசியல் களத்தில் காணலாம் என்பதால் மனதை தேற்றிக் கொள்கின்றனர்.