இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும்…

ஷங்கர் இயக்க உள்ள இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக கமல் தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். இந்த தோற்றம் முறுக்குமீசை இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தாவாக இருந்து லஞ்சம் வாங்குபவர்களை வர்ம கலையால் அடித்து வீழ்த்துவது  கருவாக வைத்து இருந்தனர். இரண்டாம் பாகம் ஊழல் எதிர்ப்பு படமாக தயாராவதாக கூறப்படுகிறது. படத்தின் கதாநாயகியாக நயன்தாராவின் பெயர் அடிபடுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என தெரிகிறது.