இந்தியன் 2 படத்திற்காக களரி கற்றுவரும் காஜல் அகர்வால் !

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில், முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறார் காஜல் அகர்வால். இதில் அவர் ஏற்றுள்ள வீரமங்கை கேரக்டருக்காக களரி பயிற்சி பெற்றுள்ள அவர், இப்போது குதிரை சவாரியும் கற்று வருகிறார். ‘கேரக்டருக்காக நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரியும். அதனால்தான் முழு ஈடுபாட்டுடன் களரி, குதிரை ஏற்றம் கற்றுக்கொள்கிறேன். இனி என்னால் இந்தியன் 2 ஷூட்டிங்கில் பதற்றம் இல்லாமல் நடிக்க முடியும்’ என்ற அவர், ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தவிர, சிவா இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.