இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு பதில் ஒளிப்பதிவாளர் ரத்னவேல் மாற்றம்

கமல் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்தியன் 2, தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படக்குழு தற்போது முழு வீச்சில் மீண்டும் இந்தியன் 2 பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி பகுதியில் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனை தொடர்ந்து சித்தார்த், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், டெல்லி கணேஷ், பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜம்வால், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்கள் பங்களிக்கின்றனர். முதன்முறையாக அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார். தற்போது சில காரணங்களால் ரவி வர்மனுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.