இந்தியன் 2 லிருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் !

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. லைகா தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் கமல், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத், பிரியா பவானி ஷங்கர் சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறது. இதில் முக்கிய ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என முன்பே கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த முடிவு எடுத்துள்ளர் என தெரிகிறது.