இந்தியன் 2 ல் கமலுக்கு வில்லன் பாபி சிம்ஹா !

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் முதல் பாகத்தில் ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கு சாட்டையடி கொடுத்திருப்பார் ஷங்கர். இதைத் தொடர்ந்து 2-ஆம் பாகமான இதில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அவலங்களை பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க இந்தி முன்னணி நடிகர்களிடம் பேசினார்கள். ஆனால் தேதிகள் சரியாக வராததால் தமிழ் நடிகரே வில்லனாக நடிக்க இருக்கிறார். படத்தின் வில்லனாகத் தற்போது பாபி சிம்ஹா கமிட்டாகியுள்ளார். இதுவரை வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது பாபி சிம்ஹாவே வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.