இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் ரிலீஸ்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக வருகிறார். ஆனால் வன்முறை அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் அளிக்க மறுத்து யூ ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். தர்பார் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நாளை வெளியாகிறது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது.