இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க இங்கிலாந்து சென்ற நடிகைகள் !

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தொடரில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். இந்தியா அடுத்ததாக நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானது. இதில் தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து இழக்கும். இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து மோதும் போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர்.