இந்திய விமானப்படையையும், அபிநந்தனையும் கிண்டல் செய்த பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்!

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானியராக இருந்தாலும் அவர் இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானியர்களிடம் சிக்கியுள்ளார். அவர் பத்திரமாக நாடு திரும்ப இந்தியர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக் அபிநந்தனை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார். இப்பொழுது தானே வந்திருக்கிறீர்கள். விருந்தாளியை நன்றாக கவனிப்போம், மரங்களுக்காக கூட நாங்கள் பழி வாங்குவோம். சிறந்தவர்களுடன் மோதினால் இது தான் நடக்கும் என்று இந்தியர்களை விமர்சித்து என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.