இந்த படத்தினால் பிரபு தேவாவிற்கு புது அடையாளம் கிடைக்குமாம்

தேவி படத்திற்கு பிறகு பிரபு தேவா வெற்றிகாரமாக இரண்டாவது இன்னிங்சை  தொடங்கிவிட்டார்.  நீண்ட நாள்   படப்பிடிப்பில் இருந்த  களவாடிய  பொழுதுகள்  திரைப்படம்  திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஜோடியாக ரோஜா கூட்டம் படத்தின் நாயகி பூமிகா நடித்துள்ளார். இதில் பூமிகா பணக்கார பெண்ணாகவும், இவர் ஏழை குடும்பம்பத்தை சேர்ந்த இளைஞனாகவும் சிறப்பாக நடித்துள்ளாராம். இதுவரை  நடித்துள்ள படங்களில் ஆடல், பாடல் என உற்சாகமான  இளைஞனாக  நடித்த இவர் இந்த படத்தில் அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த மனிதராக நடித்துள்ளாராம். இந்த படம்  இவருக்கு புது அடையாளம்  கிடைக்கும் என்றனர் படக்குழுவினர்கள்.