இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது, என்று தனுஷ் அறிவித்த படம் என்ன?

தனுஷ் நடிப்பில் தயாராகி வரும்  படம் விஐபி 2. இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. இதில் பாலிவுட் நடிகை கஜோல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், அது முடிந்தவுடன் வடசென்னை படத்தை துவங்கவுள்ளார். நீண்ட நாட்கள் முன்பே துவங்கபட்ட வடசென்னையின் 80% ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதனால் மீதியுள்ள பகுதி விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஐபி மட்டுமின்றி தனுஷ் இயக்குனராக அறிமுகமாகிய பா.பாண்டி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். இது பற்றி ராஜ்கிரணோடு பேசிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்க்கு முன்பாக ஒரு கமர்சியல் படம் இயக்கவேண்டும் என விரும்புவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.