இனியாவுக்கு உதவிய கன்னட உலகம் !

தமிழில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால், மலையாளத்தில் சில படங்களை ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் தான் கன்னட மொழி திரைப்படமான ‘துரோணா’ வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இது கன்னட மொழியில் அவர் அறிமுகமாகும் படமாகும். கல்வியை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார் ஆசிரியராக நடிக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் இனியா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின்போது, சீனியர் நடிகர் என்பதால் சிவராஜ்குமாருடன் நடிப்பதில் இனியாவுக்கு பதற்றம் இருந்துள்ளது. மேலும் கன்னடம் அவருக்கு தெரியாது என்பதாலும் வசனங்களை பேசி நடிப்பதில் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து சிவராஜ்குமார், இனியாவுக்கு தமிழில் அந்த வசனங்களைச் சொல்லிக் கொடுத்து பேச வைத்திருக்கிறாராம்.