இனி இருவரும் சேர்ந்து நடிக்கப்போவதில்லை – ஆர்யா சயீஷா முடிவு !

வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாயிஷா, அதே சமயம் 25 படங்கள் நடித்து முடித்து இருந்த ஆர்யா, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சேர்த்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள், அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விஷால், ஆர்யா இருவரும் மண்டபம் கட்டிய பிறகு தான் திருமணம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் பல பிரச்சனைகளில் சிக்கிய ஆர்யா திடீரென திருமணம் செய்து கொண்டார். ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணத்திற்கு பிறகு சேர்ந்து நடித்த படம் “டெடி”. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.