இனி காமெடி வேடத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக யோகி பாபு அதிரடி முடிவு !

தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது முன்னணி ஹீரோக்களான விஜய், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே யோகிபாபு ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு' படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், இவர் ஹீரோவாக நடித்த கூர்கா, பன்னிக்குட்டி, ஸோம்பி போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், தான் இதன் பின்னர் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என யோகிபாபு அறிவித்துள்ளார். இனி காமெடி வேடத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.