இனி நயன்தாராவுக்கு ஒரு பிரச்சினைன்னா நடிகர் சங்கம் உதவாது – நடிகர் கருணாஸ் ஆவேசம் !
நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான நடிக, நடிகையரும் வாக்களித்தனர். ஆனால் இதில் அஜீத் தொடங்கி தனுஷ் சிம்பு போன்ற முன்னணி நடிகர்களும் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளும்வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள்.விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே திமுக நீக்கியதோடு, இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக ராதாரவியை கண்டித்தது. நயன்தாராவுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது சங்கம் உதவியிருக்கிறது. அப்படியிருக்கும்போது சங்க உறுப்பினராக நயன்தாரா ஓட்டு செலுத்தி தனது கடமையை ஆற்றியிருக்க வேண்டும் என ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார் கருணாஸ். பல முன்னணி நடிகர்கள் வாக்களிக்காதபோது நயன்தாராவை மட்டும் கண்டிப்பது ஏன்? எனக் கேள்வி எழுந்துள்ளது.