இனி ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்துக் கொள்ளப்போவதில்லை – ராகவா லாரன்ஸ் அதிரடி!

ரஜினியின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். எப்பொழுதும் ரஜினி புகழ் பாடிகிறவர். சமீபத்தில் நடந்த 'தர்பார்' படவிழாவில் ரஜினியை உயர்த்தி பேசுவதாக நினைத்து கொண்டு கமலஹாசன் போஸ்டர் மீது சாணி அடித்ததாக கூறினார். இதனை ரஜினியே விரும்பவில்லை.ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் சில கருத்துக்களை முன் வைத்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குறித்து மறைமுகமாக விமர்சித்தார். இதுவும் ரஜினிக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியது. இதற்கிடையில் இனி ரஜினி கலந்துகொள்ளும் எந்த விழாக்களிலும் இனி நான் கலந்துகொள்ளப்போவதில்லை என் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் விளக்கியதாவது, நான் தலைவரின் தீவிர ரசிகன். சிறுவயதிலிருந்தே அவர் அன்புக்கு பாத்திரமானவன், அவர் அரசியலுக்கு வருவது பெருத்த மகிழ்சியை உண்டாக்கியது. மேலும் அவர் விழாவில் அவரை உயர்த்தி பேசவேண்டும் என்பதற்காக நான் அப்படி கூறவில்லை. அவர் பேச விரும்பினால் அவரே பேசுவார்.ஒருவரை தூண்டிவிட்டு பேசக்கூடிய நபர் இல்லை. நான் பேசியது தலைவர் மேல் கொண்ட பேரன்பினால்தான் தவிர எந்தவித உள்நோக்கமும் இல்லை. என்னால் தலைவருக்கு எந்த இடஞ்சல்களும் வரதேயில்லை. ஆகையால் இனி தலைவர் கலந்து கொள்ளும் எந்த விழாவிலும் இனி தலைவர் அனுமதி இல்லாமல் நான் கலந்துகொள்ளமாட்டேன். ஒரு ரசிகனாக நான் அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசிர்வாதமும், ஒரு புகைப்படமும் தான் என் கூறி முடித்துக்கொண்டார்.