இன்றளவும் கவுண்டமணியுடன் டச்சில் இருக்கும் முன்னணி நடிகை !

நடிகர் கவுண்ட மணி. அவர் இல்லாமல் முக்கிய ஹீரோக்களின் படங்கள் வராது, வந்தாலும் பெரிதாய் ஓடாது எனும் நிலை. காமெடியன் என்பதை தாண்டி கவுண்டமணிக்கு முக்கியத்துவம் அளித்து வந்தனர். இயக்குநர்கள். டூயட்டுகளிலும் கூட கவுண்டமணியை இடையில் செருகிவிட்டு, ஹீரோயின்களை அவரோடு ஆட வைத்தனர். நக்மா பிஸி ஹீரோயினாக இருந்தபோது, தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்த நடிகர் கவுண்ட மணி. ஆனால் ‘மேட்டுக்குடி’ படத்தில் அப்படி ஆட சொன்னதற்கு மறுத்து இயக்குநரோடு கடும் சண்டை போட்டார் நக்மா. பின் வேறு வழியில்லாமல் ஆடினார். அந்தப் பாட்டு செம்ம ஹிட்டு. இப்பவும் கவுண்டருடன் போன் தொடர்பில் இருக்கிறார் நக்மா. மனசு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் அவருகு போன் செய்து பேசி ரிலாக்ஸ் செய்வது நக்மாவின் வழக்கம்.