இன்று கோடியில் புரளும் பிரபலங்களின் அன்றைய முதல் சம்பளம்?
இன்றைய தமிழ் சினிமாவில் நுழையவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தவர் தான் விஜய் சேதுபதி. விடா முயற்சிக்கு பின், ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி, பின் குணச்சித்திர நடிகர், வில்லன் என படிப்படியாக தன்னுடைய நடிப்பின் திறமையால் ஹீரோவாக முன்னுக்கு வந்தவர்தான் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், தன் மனதிற்குப் பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு, குறைந்த பட்சம் 8 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் இவர், முதல் முதலாக படித்து முடித்து வேலைக்குப் போய் முதல் முதலாக 3 ஆயிரத்து 500 ரூபாய்தான் சம்பளமாக வாங்கினாராம். இவரைப்போலவே ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது. தன் 'டோன்ட் கேர் ஆட்டிட்யூட்' பேச்சு, நடை, பழகும் விதம் என அனைவரையும் கவர்ந்த இவர், தற்போது, பிரபல ஆங்கில பத்திரிகை 'ஃபோர்ப்ஸ்' வெளியிட்டுள்ள இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலான '30 அண்டர் 30'யில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் 72-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.