‘இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால் !

‘இன்று நேற்று நாளை’ இந்த படம் 2015-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை தயாராகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். முதல் பாகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகி உள்ளது. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரியா பவானி சங்கர் ‘மேயாதமான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.