இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்! தனுஷ் ரசிகர்கள் கூறியது என்ன?

நடிகர் தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான ‘துள்ளுவதோ இளமையில்’ தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இன்று இவர் இந்திய அளவில் பெரிய நடிகராகிவிட்டார். தற்போது ஹாலிவுட் படத்தில் கூட நடித்து வருகின்றார். ஆனால், இவர் நடிக்க வந்த போது இவர் மீதான விமர்சனம் அனைவரும் அறிந்ததே. மிகவும் மோசமான வார்த்தைகள் தனுஷை தரையில் அமர்ந்து அழும் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனால், தன் இரண்டாவது படத்திலேயே பேசியவர்கள் வாயை எல்லாம் அடைத்தார். ‘துள்ளுவதோ இளமை’ செல்வராகவன் இயக்கிய முதல் படம், தனுஷ் சோலோ ஹீரோவாக கலக்கிய முதல் படம், யுவனின் மிரட்டல் இசையாம் பட்டித்தொட்டியெல்லாம் படம் பட்டையை கிளப்பியது. அந்த வருடத்தின் அதிக வசூல் செய்த படங்கள் ‘காதல் கொண்டேனும் ‘இடம்பெற்றது, இன்றுடன் ‘காதல் கொண்டேன்’ வெளிவந்து 14 வருடம் ஆகிவிட்டது, இதை அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.