இமயமலை சென்று போட்டோ ஷூட் நடத்திய பேட்ட பட நடிகை !

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளின் பட்டியலில் மாளவிகா மோகனனும் இடம் பிடித்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் தற்போது தெலுங்கு பக்கமும் கவனத்தை திருப்பி இருக்கிறார். சமீபத்தில் இமயமலைக்கு சென்றவர், அங்கு விதவித போஸ்களில் புகைப்படம் எடுத்துள்ளார். இதுபற்றி மாளவிகா மோகனன் கூறும்போது, ’இமயமலையில் நம்மை சுற்றி நிலவும் நிசப்தம் நம்முடையது அல்ல அது இமயத்தின் நிசப்தம்’ என குறிப்பிட்டிருப்பதுடன், என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் ஓணம் கொண்டாட்டத்துக்காக அணியும் பாரம்பரிய சேலையின் மீதிருக்கும் மோகம் எனக்கு என்றைக்கும் மாறாது’ எனத் தெரிவித்திருக்கிறார். ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சேலை அணிந்து அவர் அளித்திருக்கும் கவர்ச்சி போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.