இமானின் 100 வது படம்.

இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள “டிக் டிக் டிக்” படம் தனது 100வது படம் என்றும், 100 படங்களில் 125 பாடகர்களை அறிமுகபடுத்தியிருக்கிறேன் என்றும் பெருமையுடன் செய்தியாளரிடம் கூறியுள்ளார். அவர் இசையை முறையாக பல மாஸ்டர்களிடம் கற்றேன் என்றும், முதலில் கீபோர்ட் பிளேயராக வாழ்க்கையை தொடங்கினேன். அதன் பிறகு 200க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு இசை அமைத்தேன். கிருஷ்ணதாஸி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி 100 தொடர்களுக்கு மேல் இசை அமைத்தேன். அதன் பிறகு காதலே சுவாசம் படத்தில் 2002 ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானேன், ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. சின்ன படம், பெரிய படம், நல்ல படம் ,கேட்ட படம் என்ற பாகுபாடு இன்றி பணியாற்றி வருகிறேன். லைப் ஆர்க்கெஸ்ட்ராவையே பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கீழ் 100பேர் வேலை செய்கிறார்கள், யாருக்கும் ஒரு ரூபாய் சம்பளம் பாக்கி வைத்ததில்லை. நன் பாடுவதற்கும் யாரிடமும் சம்பளம் வாங்குவதில்லை என்றும் கூறிள்ளார். இன்று 100 படம் நாளை 1000 படம் என்ற பேராசை இல்லை ஆனால் ஒவ்வொருவரும் தங்களது கம்ப்யூட்டர், லேப் டாப்பில் ,போனில் என எனக்கென்று ஒரு தனி போல்டர் உருவாக்க வேண்டும்,என்றும் அதில் காலத்தை வென்ற 100 பாடல்கள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்றார் அவர்.