இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை !

சொல்லுங்கண்ணே சொல்லுங்க புகழ் இம்மண் அண்ணாச்சி சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில், பீரோவில் இருந்த 41 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.