இமேஜ் பற்றிய கவலை எனக்கு இல்லை – விஜய் சேதுபதி !

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. நடிகர் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் இப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில். படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர உள்ளது. படப்பிடிப்பு முழுவதையும் இம்மாத இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டு உள்ளனர். இதன்பிறகு படத்தொகுப்பு மற்றும் குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெற இருக்கிறது. ஒரு ‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே? என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அதுதான் விஜய்சேதுபதி அவர் கேள்வி குறித்து  பதில் அளிக்கையில் இமேஜ் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் அதில் நடிக்கிறேன் கூறினார்.