இயக்குணர் ஆனந்த் ஷங்கர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் தெரியுமா?

இயக்குணர் ஆனந்த் ஷங்கர் அரிமா நம்பி, இருமுகன் என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர். இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் இந்த வருட சென்சேஷன் என்றால் அர்ஜுன் ரெட்டி தான், இப்படத்தை தெலுங்கு சினிமா தலையில் தூக்கி கொண்டாடியது. இதில் ஹீரோவாக நடித்திருந்தவர் விஜய் தேவரகொண்டா.  தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகிவருகின்றார். அந்த வகையில் அடுத்து இயக்குணர் ஆனந்த் ஷங்கர் படத்தில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளதாம் என கூறப்பதுகிறது.