இயக்குநராகிறார் பாடகி சுசித்திராவின் கணவர் கார்த்திக் !

யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் நடித்தவர், கார்த்திக் குமார். இவர், பாடகி சுசித்ராவின் கணவர். நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் இயக்குனர் ஆகியுள்ளார். படத்துக்கு ஜஸ்டிஸ் லீக் என்று பெயர் சூட்டியுள்ளார். இதில் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஊர்வசி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் கார்த்திக் குமார் நடிக்கவில்லை. ஒரு இளம் ஜோடி படத்தின் லீட் கேரக்டரில் நடிப்பதாகவும், தற்போது அதற்கான தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.