இயக்குநர் பாரதிராஜாவின் கல்லூரியை திறந்து வைக்கும் கமல்-ரஜினி

தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குநர் என்றால் பாரதிராஜா.இவர் இயக்கத்தில்​ கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்த​ '16 வயதினிலே' திரைப்படம் தமிழ்த்திரையுலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பாரதிராஜா, கமல்-ரஜினி இருவரையும் தனித்தனியாகவும் இயக்கி வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பாரதிராஜா தற்போது திரைப்பட கல்லூரி ஒன்றை தொடங்கவிருக்கின்றார். இந்த கல்லூரியின் திறப்பு விழாவில் ரஜினி-கமல் ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கப்படவுள்ளது.

இந்த கல்லூரி திரைத்துறையில் புதிதாக நுழைபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமையும் என்று எதிர்பார்கப்படுகிறது.