Cine Bits
இயக்குநர் மீது வழக்குப்பதிவு – நட்சத்திர ஓட்டலில் ரகளை !

சென்னை அண்ணா சாலையில் பார் வசதியுடன் பிரபல நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு ‘டார்லிங் 2’ படத்தை இயக்கிய சினிமா இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவர், மதுபோதையில் அந்த நட்சத்திர ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது அந்த பெண் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.