இயக்குநர் ஷங்கருக்காக மாபெரும் சேவை – இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

அந்நியன்’ படம் தவிர்த்து மீதி அத்தனைப் படங்களிலும் தன்னையே இசையமைப்பாளராக வைத்துப் படம் இயக்கிய ஷங்கர் ‘இந்தியன் 2’ வில் தன்னை விடுத்து அனிருத்துக்கு வாய்ப்பளித்ததைப் பொருட்படுத்தாமல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் ஷங்கருக்காக சேவை ஒன்றை செய்துள்ளார். கமலின் முழு நேர அரசியல் பிரவேசத்தால் அவதிக்கு ஆளாகியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் டிராப் ஆகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அப்படத்தை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றும் முயற்சியில் ஷங்கர்
இறங்கியிருக்கிறார்.ஷங்கரின் இம்முயற்சிக்கு, அவருக்கு தகவல் தெரிவிக்காமலேயே, தனக்கு மிகவும் நெருக்கமான மும்பை நிறுவனம் ஒன்றிடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசி வந்தாராம். அது தற்போது ஏறத்தாழ ஓ.கே. ஆகும் நிலைக்கும் வந்துவிட்டதாகத் தகவல்.