இயக்குனராகும் மோகன் லால் – ரசிகர்கள் மகிழ்ச்சி !

மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அளவிலும் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் மோகன் லால், கடந்த 40 வருடங்களாக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள், ஜனரஞ்சகமான சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு 3டி திரைப்படத்தை மோகன் லால் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்திற்கு Barroz என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரங்களான பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ போன்றோருடன் மோகன் லாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது