Cine Bits
இயக்குனராக அவதாரமெடுக்கும் மோகன்லால் !
நடிகராக ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால், தற்போது இயக்குநராகிறார். அவர் இயக்கும் முதல் படத்துக்கு 'ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக மோகன்லால் தனது இணையதள வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நடிகராக பல்வேறு சாதனைகள் புரிந்த மோகன்லால், இயக்குனராக அடியெடுத்து வைத்ததன் மூலம் அதிலும் பல சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.