Cine Bits
இயக்குனர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே திடீரென வாக்குவாதம்….

சென்னையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேரன் அமீர்,விஷால், ஏ.ர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி,கே.எஸ் .ரவிக்குமார்,பி.வாசு என பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.