இயக்குனர் அவதாரம் எடுக்கவிருக்கும் டேனியல் பாலாஜி !

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக பல கதைகள் எழுதி வைத்துள்ளதாகவும், அதனை நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லி பகிர்ந்து வருகிறார். விரைவில் புதிய கதை களத்துடன் திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.