இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனின் சென்டிமென்ட்

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் – மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே தினத்தில் தான் 2012 ஆண்டு ஜூலை 3ம் தேதி எஸ்.ஆர்.பிரபாகரனின் சுந்திரபாண்டியன் படத்தின் முதல் போஸ்டர் ரிலீசாகி இருக்கிறது.