இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்தப்படம் என்ன தெரியுமா?

தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் வெளிவந்த 'காற்று வெளியிடை', ரசிகர்களிடம் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனால், மணிரத்னம் அதையெல்லாம் கவலைப்பட மாட்டார். தன் அடுத்துப்பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், பஹத்பாசிலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை, ஆனால், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன் இந்த கூட்டணி ரோஜா, இருவர், தளபதி, உயிரே, ராவணன் என 5 படங்களில் பணியாற்றியுள்ளது என குறிப்பிடத்தக்கது.