இயக்குனர் முருகதாஸின் ஸ்பைடர் படம் என்ன நிலையில் இருக்கிறது தெரியுமா?

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'.  இப்படத்தில் ஹீரோவாக மகேஷ் பாபு நடித்து வருகின்றார். இதில் படப்பிடிப்புகள் இன்றுடன் முடியவுள்ளதாம், இன்னும் 2 பாடல் காட்சிகளே மீதி இருக்கிறது என கூறப்படுகின்றது. இதற்கிடையில் இப்படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்கவுள்ளதாம் ஸ்பைடர் படக்குழு, இதில் பாடல்கள் அடுத்த மாத இறுதியில் வெளிவருகின்றது. ஸ்பைடர் செப்டம்பர் 29-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளது.