இயக்குனர் விக்ரமன், திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவரானார்.

நேற்று நடத்தப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தல் மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது முறையாக இயக்குனர் விக்ரமன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்களிக்க 2300 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் 1601 பேர் மட்டும் வாக்களிக்க வந்தனர். மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டது. முடிவில் விக்ரமன் 1532 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றபிறகு உறுப்பினர்களின் கோரிக்கை 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என  செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன் தெரிவித்தார்.