Cine Bits
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ் என்ன தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சென்னை 28 இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர் நான் அடுத்து குறும்படம் இயக்கப்போகிறேன் என ட்விட்டரில் அறிவித்துள்ளார். ''குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்கெனவே இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. ஆர்.கே.குமார் சமூக கருத்தை சொல்லக்கூடிய வலுவான ஒரு கதையைச் சொன்னார். அது 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்தது. அதைக் குறும்படமாக எடுக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.