இரட்டை வேடத்தில் புன்னகை அரசி!

பிரபல நடிகை கே.ஆர்.விஜயா தற்போது ‘கோடீஸ்வரி என்ற படத்தில் இருவேடங்களில் நடித்து வருகிறார்பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு‘கோடீஸ்வரி என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் கே.ஆர்.விஜயா. மேலும் இந்தப் படத்தில் மோகன், ரிஸ்வான், அஷ்மா, சுப்ரஜா என்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்தை, சாய் இளவரசன் என்ற புதுமுகம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேஷன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு தாமஸ் ரத்னம் இசைமைக்கிறார். ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கும், சாதாரண பெண்ணுக்கும் இடையே நடக்கிற மோதல் தான் இந்தப் படத்தின் கதை படப்பிடிப்புகள் மதுரை, சிவகங்கை, சேலம், ஏற்காடு பகுதிகளில் நடந்து வருகிறது.