இறுதியில் விக்னேஷ் சிவன் – நயன் கால்கட்டு போட தேதி குறிச்சாச்சு !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால் தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நயன்தாராதான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாதாகவும் செய்திகள் வந்தன. கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரது திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒருவழியாக இவர்களுக்கு கால்கட்டு போட நாள் குறித்து முடிவாகிவிட்டது. வருகிற டிசம்பர் 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது. அது இந்து முறைப்படி நடக்குமா, கிறிஸ்துவ முறைப்படி நடக்குமா என்பது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இந்து மதத்தை சேர்ந்தவர். நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.