இளவயது ஹீரோவுடன் ஜோடி சேரும் டிடி !

நடிகை டிடி சின்னத்திரையில்  தொகுப்பாளினிகளிள் மிகவும் பிரபலமானவர். தற்போது வெள்ளித்திரையிலும் தலை காட்ட ஆரம்பித்து விட்டார் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் சர்வம்  தாளமயம் படத்திலும் நடித்துள்ளார், இந்த நிலையில் தெலுங்கில் ஒரு படத்தில் அறிமுகமாக இருக்கிறார் இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க இருக்கிறார். அதேபோல் ஹீரோவாக அவர் மகன் ஆகாஷ் நடிக்க இருக்கிறார், ஹீரோயினாக டிடி தான் நடிக்க இருக்கிறார். ஆனால் ட்விட்டரில் தொகுப்பாளினி டிடி மை ஸ்வீட் ஹார்ட் ஹீரோ ஆகாஷ் என குறிப்பிட்டுள்ளார். ஆகாஷுக்கும்  டிடி க்கும் பதிமூன்று வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகாரபூர்வ தகவல் இன்னும் தெரிவிக்கவில்லை.