இளைஞர்களுக்கு நடிப்பு பயிற்சியளிக்கும் சார்லீ – வாய்ப்பை தவறவிடாதீர்கள் !

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான நடிகர் சார்லி, நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கவுள்ளார். தமிழ் ஸ்டூடியோ சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உணர்தல், மனோநிலை பாகுபாடு, பாத்திரங்களுக்கு ஏற்ப உருமாறுதல், குரல் வெளிப்பாடு, உடல்மொழி வெளிப்பாடு, உடல் தோற்ற வெளிப்பாடு போன்ற தலைப்புகளில் பேசவுள்ளார் சார்லி. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு சார்லி மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக நடிப்பு பயிற்சியை நடத்திக்கொடுக்க முன்வந்துள்ளார். அதுவும் தமிழ் ஸ்டுடியோவின் நிதிப்பிரச்சனையை சமாளிக்க ஒரு ரூபாய் கூட வேண்டாம், நானே கைக்காசு செலவு பண்ணி அரங்கிற்கு வந்து பயிற்சி கொடுத்துவிட்டு, பிறகு நானே வீடு திரும்பிக்கொள்கிறேன், எந்த வகையிலும் எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் தமிழ் ஸ்டுடியோவின் பணிக்காக முழுக்க முழுக்க பிசியான நேரத்தில், ஒரு முழு நாள் ஒதுக்கி நடிப்பு பயிற்சி கொடுக்க இருக்கிறார். நண்பர்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உடனே முன்பதிவு செய்துவிடுங்கள், உள்ளத்தில் பெரும் நம்பிக்கையை விதைக்கக்கூடியவர் சார்லி.