இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – பட விழாவில் சூர்யா பேச்சு !

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது, நான் இயக்குனர் செல்வராகவனின் தீவிர ரசிகன். அவர் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற 19 வருட கனவு என்.ஜி.கே. படத்தில் நிறைவேறி இருக்கிறது. இது அரசியல் படம். சாதாரண இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதும் கதை. பொதுவாக ஓட்டுப்போட ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அரசியலுக்கு வர தயங்குகின்றனர். படித்தவர்களே இப்படி ஒதுங்கினால் எப்படி மாற்றம் கொண்டு வரமுடியும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதைத்தான் படத்தில் சொல்லி இருக்கிறோம்.