இளையதளபதி விஜய்க்கு செட் ஆகாத ஹீரோயின் யார்? அவர் சொன்ன பதில் என்ன?

இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் பெண் ரசிகர்களும் ஏராளம். மற்றும் குழந்தைகளுக்கும் பிடிக்கும். சங்கர் இயக்கத்தில் நண்பன் படம் கடந்த 2012 ல் வெளியானது. இதற்கான விளம்பர நிகழ்ச்சி பிரபல டிவியில் நடந்தது. இதில் இயக்குனர் சங்கர், விஜய், ஸ்ரீ காந்த், ஜீவா என பலரும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் விஜயிடம் கேள்வி கேட்டனர். இதில் பெண் ரசிகை ஒருவர் இவங்க கூட படம் பண்ணக்கூடாது என நீங்கள் நினைக்கும் இயக்குனர் யார் என கேட்க அப்படி யாரும் இல்லை என்றார் விஜய். மேலும் உங்களுக்கு செட் ஆகாத ஹீரோயின் யார் என கேட்க விஜய் சற்றி திணறியது போல் இருந்தார். அப்போது பக்கத்தில் இருந்த ஸ்ரீகாந்த் அவன் இவன் விஷால் ( லேடி கெட்டப்) என சொல்ல விஜய் சிரித்து விட்டார். அப்போது இல்லை. நீங்கள் சொல்லியே ஆகவேண்டும் என அந்த பெண் கேட்க ஓகே அதையே வச்சிக்கோங்க (ஸ்ரீ காந்த் சொன்னதை) என விஜய் சொல்ல நிகழ்ச்சியில் சிரிப்பலைகள் பொங்கியது.