இளையதளபதி விஜய்யின் 61வது படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்

அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் படக்குழுவினர் இப்பட தயாரிப்பாளர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஏற்கெனவே இப்படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்க படத்தில் மற்றொரு காமெடி நடிகர் இணைந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் வேறுயாரும் இல்லை, இன்றைய டிரண்டில் ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு நடிக்க இருக்கிறார். படத்தில் வடிவேலு, சத்யன் என இரு காமெடி நடிகர்கள் இருக்க இவரும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அதேசமயம் ரசிகர்கள் இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.