இளையராஜாவுடன் இணைந்து மேடையேறுகிறார் எஸ்.பி.பி !

இசைஞானி-எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த சண்டை முடிவுக்கு வந்தது. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இருவரும் மீண்டும் இருவரும் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர். 80 களின் மத்தியில் ஒரு முறை ராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இடையில் தோன்றிய உரசலில்தான் மனோவே ராஜாவால் வளர்க்கப்பட்டார். பின்னர் மீண்டும் சமாதானமார்கள். பின்னர் 2017-ம் வருடம் மார்ச் மாதம் இளையராஜா – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக புதிய மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். ராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். ம் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். ஆனால் இதை சர்ச்சையாக்கி என்னையும் ராஜாவையும் பிரித்துவிடாதீர்கள்’ என்று கோரியிருந்தார் எஸ்.பி.பி. இந்நிலையில் சென்னை – செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் வரும் ஜூன் 2ம் தேதி ராஜாவின் 76வது பிறந்த நாள் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்ட எஸ்.பி.பி. தானே முன்வந்து பாடவிரும்பியதாகவும் மேலும் கே.ஜே.ஜேசுதாஸ் உட்பட அத்தனை முன்னணிப் பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் பாட உள்ளதாகவும் தகவல்.