இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது – சென்னை உயர்நீதி மன்றம் !

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வந்தார். என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய வி‌ஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும் என்று கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ‘இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.