Cine Bits
இளையராஜா பாடல்களுக்கு ராயல்டி கேட்பது தவறு – டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் எதிர்ப்பு .
தயாரிப்பாளருக்கே பாடல் சொந்தம். அந்த உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று கருத்துத் தெரிவிக்கின்றார் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன்.
திரைப்படத்தில் பணிபுரியும் ஒவ்வொரு துறையினரும் தங்களுக்குரிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு தான் வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே 'ராயல்டி' கேட்பதில்லை. அதுபோல்தான் இசையமைப்பாளர் இளையராஜா ராயல்டி கேட்பது தவறு என்று பொங்கி எழுகிறார் டைரக்டர் . எஸ் .ஏ. சந்திரசேகரன்.
இந்த ராயல்டியைப் பெறத் தயாரிப்பாளர்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்று தெரிவுபடுத்தியுள்ளார் இளைய தளபதி விஜையின் தந்தை மற்றும் டைரக்டரான எஸ்.ஏ. சந்திரசேகரன்.