இவன் தந்திரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் 'இவன் தந்திரன்'. இப்படம் சில வாரங்களுக்கு முன் வந்தது. ஆனால், திரையரங்க போராட்டத்தின் காரணமாக இப்படம் 4 நாட்கள் வரை எங்கும் ஓடவில்லை. இதனால், இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது, தற்போது மீண்டும் கடந்த வாரம் மறு வெளியீடு ஆக, சென்னையில் இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் சென்னையில் ரூ 93 லட்சம் வரை வசூல் செய்துள்ளது, தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 5 கோடி வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.