இவ்வருட இறுதியில் காளியன் படப்பிடிப்பு துவங்கும் – பிரித்விராஜ் அறிவிப்பு !

நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் பிரித்விராஜ், இரண்டு ஆண்டுகளுக்கு முன் காளியன் என்ற படத்தில் தான் நடிக்க போவதாக தானே முன் வந்து பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார். ஆனால் இப்போதுவரை அந்த படம் துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. 300 ஆண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த சரித்திர வீரன் குஞ்சிரக்கோட்டு காளி கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார். தற்போது கொல்லம் பகுதியாக இருக்கின்ற, 1600 ஆம் ஆண்டுகளில் வேநாடாக இருந்த பகுதியின் தன்னிகரில்லாத தளபதியாக விளங்கிய இரவிக்குட்டி பிள்ளை பற்றிய வரலாறு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு விசுவாசமான போர் வீரரான குஞ்சிரக்கோட்டு காளி பற்றிய வீர வரலாறு பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. அவனது வீரம், தியாகம், நாட்டுப்பற்று ஆகியவை பறைசாற்றும் இந்த கதையில் காலியாக நடிப்பதில் பெருமிதம் கொள்வதாக பிரித்விராஜ் கூறுகிறார்.